கோவை மாவட்ட ஆட்சியரிடம் 10 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என ஆஷா பணியாளர்கள் புகார்

கோவை : வால்பாறை ஆஷா பணியாளர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

கோவை : வால்பாறை ஆஷா பணியாளர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.



வால்பாறை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 ஆஷா என்னும் சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், கடந்த 2017-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத ஊக்கத்தொகை வழங்கப்படாமல் இருப்பதாகவும், இது குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் முறையிட்டபோது ஆஷா பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி கிடைக்கப் பெறவில்லை என புகார் தெரிவித்தனர். 

இந்த நிலையில், முறையாக ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட ஆஷா பணியாளர்கள் மனு அளித்தனர். மேலும், 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருபவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...