மரத்தடியில் நின்று செல்போனில் பேசியவர் இடி தாக்கி பலி

திருப்பூர்: திருப்பூர் அருகே வாலிபர் ஒருவர் மழைக்கு மரத்தடியில் ஒதுங்கி நின்று செல்போன் பேசியபோது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருப்பூர்: திருப்பூர் அருகே வாலிபர் ஒருவர் மழைக்கு மரத்தடியில் ஒதுங்கி நின்று செல்போன் பேசியபோது இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (31). திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்காவில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரியா(25). இவர்களுக்கு ஒரு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், இவர் நேற்று வீட்டிற்கு வந்து மதிய உணவு உண்ட பின்னர், இரு சக்கர வாகனத்தில் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

பரமசிவம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்து போது திடீரென கனமழை பெய்ததால், அருகில் இருந்த மரத்தடியில் நின்றுகொண்டு தனது செல்போனில் பேசினார். அப்போது எதிர்பாராத விதமாக இடி தாக்கியதில், குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருமாநல்லூர் போலீசார் குருமூர்த்தியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடி தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...