கோவையில் நடைபெற்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி மும்பையில் கைது

கோவை: கோவையில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளி மோகன்ராம் மும்பையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவையில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளி மோகன்ராம் மும்பையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பழிக்குப்பழியாக மகாதேவன், தியாகு, அருண் ஆகிய மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 21 பேரை சூலூர் போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான மோகன்ராமை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் தான் அவரை மும்பையில் வைத்து கோவை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். பிரபல ரவுடியான மோகன்ராம், கடந்த 4 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தார். அவர் மீது திண்டுக்கல், திருப்பூர், சென்னை ஆகிய இடங்களில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டபிறகும் தலைமறைவாக இருந்த மோகன்ராமைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. 

இந்த நிலையில், மோகன்ராம் மும்பையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கோவை காவல்துறையினர் அவரை மும்பையில் வைத்து மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். இன்று மும்பையிலிருந்து மோகன்ராமை கோவைக்கு அழைத்துவர உள்ளதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்தனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...