உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் மின்னல் தாக்கியதில் பழமை வாய்ந்த மரம் எரிந்து நாசம்

நீலகிரி : உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் மின்னல் தாக்கியதில் பழமை வாய்ந்த மரம் எரிந்து நாசமாகிய சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி : உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் மின்னல் தாக்கியதில் பழமை வாய்ந்த மரம் எரிந்து நாசமாகிய சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதுடன், கடும் குளிர் வீசி வருகிறது. உதகை தாவரவியல் பூங்காவில் 150 ஆண்டு பழமையான அரக்கேரிய வகை சேர்ந்த மரம் கார்டனில் மையப்பகுதியில் இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று மாலை உதகை தாவரவியல் பூங்கா பகுதியில் கடுமையான மின்னல் தாக்கியது. இதில் பழமை வாய்ந்த மரம், திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவலறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.



தொடர்ந்து, மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் யாரும் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பூங்கா பகுதியில் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...