கோவை : அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாலையாக அணிந்து வந்து கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகர் நலச்சங்க இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கவுண்டம்பாளையம் 8-வது வார்டுக்கு உட்பட்ட அன்னை இந்திரா நகர், மீனாட்சி நகர் பகுதிகளில் சாக்கடை கால்வாயை மூட கோரியும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த நான்கு வருடங்களாக மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவிடம் பலமுறை மனு அளித்துள்ளனர்.

ஆனால், தங்களது மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாலையாக அணிந்து வந்து அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் நல இளைஞர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
சுமார் 5,000 குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதி மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், தற்போது பெய்து வரும் மழையினால் தொற்று நோய் பரவ வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முறையாவது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்தனர்.