தொழில்வரியை உயர்த்தியது கோவை மாநகராட்சி நிர்வாகம்

கோவை: மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்படும் தொழில் வரி அக்டோபர் 1-ம் தேதி முதல் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை: மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்படும் தொழில் வரி அக்டோபர் 1-ம் தேதி முதல் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சொத்துவரி, தொழில்வரி, குப்பை வரி, குடிநீர் கட்டணம் போன்ற பல்வேறு வரி இனங்கள் மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்படுகிறது. இதில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களிடம், ஆறு மாதத்திற்கு ஒரு முறை தொழில் வரி வசூலிக்கப்படுகிறது.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தப்படும் தொழில் வரி, தனி நபரின் அரையாண்டு சம்பளத் தொகைக்கு ஏற்ப பிடித்தம் செய்யப்படுகிறது. 



இந்நிலையில், கோவை மாநகராட்சி உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தொழில் வரித்தொகை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட தொழில் வரித்தொகை கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, ஆறு மாத சம்பளத் தொகையாக மொத்தம் ரூ.21 ஆயிரம் பெறுபவர்களுக்கு தொழில்வரி வசூலிக்கப்படுவதில்லை. 

ரூ.21 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை (ஆறு மாத சம்பளத் தொகை சேர்த்து) பெறுபவர்களிடம் முன்பு ரூ.127 வசூலிக்கப்பட்டு வந்த தொழில்வரி தற்போது ரூ.171 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.30,001 முதல் ரூ.45,000 வரை (ஆறு மாத சம்பளத் தொகை சேர்த்து) பெறுபவர்களிடம் முன்பு ரூ.317 வசூலிக்கப்பட்டு வந்த தொழில்வரி தற்போது ரூ.428 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.45,001 முதல் ரூ.60 ஆயிரம் வரை (ஆறு மாத சம்பளத் தொகை சேர்த்து) பெறுபவர்களிடம் முன்பு ரூ.634 வசூலிக்கப்பட்டு வந்த தொழில்வரி தற்போது ரூ.856 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.60,001 முதல் ரூ.75,000 வரை (ஆறு மாத சம்பளத் தொகை சேர்த்து) பெறுபவர்களிடம் ரூ.950 வசூலிக்கப்பட்டு வந்த தொழில் வரித்தொகை ரூ.1,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.75 ஆயிரத்திற்கு மேல் (ஆறு மாத சம்பளத் தொகை சேர்த்து) பெறுபவர்களிடம் முன்பு ரூ.1,250 ஆக வசூலிக்கப்பட்டு வந்த தொழில் வரித்தொகை அதே அளவில் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி அதிகரிப்பு நடவடிக்கையால் மாநகராட்சி நிர்வாகத்தின் வருவாய் அதிகரிக்கும் எனவும், இந்த தொகை நகரின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு உதவும் என மாநகராட்சி அதிகாரிகள் கருதுகின்றனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...