கோவையைச் சேர்ந்த மாவோயிஸ்ட் பாலக்காட்டில் கைது செய்யப்பட்ட விவகாரம்: நவம்பர் 3 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

கோவை: கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள வனப்பகுதியில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்த மாவோயிஸ்ட் டேனிஷ் என்பவரை நவம்பர் 3 ஆம் தேதி வரை காவலில் வைக்க பாலக்காடு முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை: கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள வனப்பகுதியில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்த மாவோயிஸ்ட் டேனிஷ் என்பவரை நவம்பர் 3 ஆம் தேதி வரை காவலில் வைக்க பாலக்காடு முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மலைப்பகுதிகளில் நக்சல் தடுப்பு போலீசாரும், தண்டர்போல்ட் போலீசாரும், கேரள போலீசாரும் இணைந்து மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படி நடைபெற்று வரும் தேடுதலில் பாலக்காடு மாவட்டம் அகழி பகுதியில் டேனிஷ் என்ற மாவோயிஸ்டை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து அவரை அகழி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அவர் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வக்குமாரின் மகன் டேனிஷ்(29) என்பதும், கோவை சுங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளதும்,

புலியகுளம் அருகே உள்ள சடையப்பர் தேவர் வீதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. 

இவர் கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டில் அட்டப்பாடி, நிலம்பூர் ஆகிய பகுதிகளில் போஸ்டர் ஓட்டியது மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வாங்கியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து அவர் பாலக்காடு முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் நவம்பர் 3ம் தேதி வரை சிறையிலடைக்க உத்தரவிட்டார்.

இந்தநிலையில் நீதிமன்றத்திற்கு வந்த டேனிஷ், "ஆளுகின்ற அரசனுக்கு எல்லாம் கிடைக்கிறது, சாதாரண மக்களுக்கு ஏதுமில்லை" என நீதிமன்ற வாயிலில் கோஷம் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...