இதுவரை சன்மானம் கிடைக்கவில்லை: வீரப்பனை என்கவுண்டர் செய்ய போலீசாருக்கு உதவிய சண்முகப்பிரியா கோவையில் பேட்டி

கோவை: தமிழக, கர்நாடக வனப்பகுதிகளில் ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த சந்தன கடத்தல் வீரப்பனை அதிரடிப்படை என்கவுண்டர் செய்ய முக்கிய பங்காற்றிய சண்முகப்பிரியா விற்கு அரசு அறிவித்த எந்த சன்மானமும் தொகையும் வரவில்லை சண்முகப்பிரியா குற்றம் சாட்டியுள்ளார்.


கோவை: தமிழக, கர்நாடக வனப்பகுதிகளில் ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த சந்தன கடத்தல் வீரப்பனை அதிரடிப்படை என்கவுண்டர் செய்ய முக்கிய பங்காற்றிய சண்முகப்பிரியா விற்கு அரசு அறிவித்த எந்த சன்மானமும் தொகையும் வரவில்லை சண்முகப்பிரியா குற்றம் சாட்டியுள்ளார்.



வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளை என்கவுண்டர் செய்ய தமிழக-கர்நாடக அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டன.

இப்படியிருக்க வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரது குழந்தைகளை கோவை வடவள்ளி பகுதியில் காவல் துறையினர் தங்க வைத்தனர்.

அப்போது அதிரடிப்படை தலைவராக இருந்த செந்தாமரைக்கண்ணன் வீரப்பன் மனைவியுடன் நெருங்கிப் பழகி வீரப்பன் குறித்த தகவல்களை பெறும்படி கோவை வடவள்ளியை சேர்ந்த சண்முகபிரியா என்ற பெண்ணை நியமித்தார்.

இந்த நிலையில் முத்துலட்சுமியுடன் நெருங்கிப் பழகிய சண்முகப்பிரியா வீரப்பன் குறித்த தகவல்களை சேமித்து அதிரடிப்படைக்கு தகவல் தெரிவித்து வந்துள்ளார்.

இதில் வீரப்பன் நடமாட்டம் குறித்தும், வீரப்பனுக்கு கண் பார்வை குறைந்து இருப்பது குறித்த தகவல்களையும் சேகரித்து அதிரடி படையினருக்கு கொடுத்தார்.

இந்த தகவல்கள் வீரப்பனை என்கவுண்டர் செய்ய காவல் துறைக்கு முக்கிய பங்காற்றியது.

இந்த தகவல்கள் மூலம் வீரப்பனை அதிரடிப்படையினர் என்கவுண்டர் செய்தனர்.

கடந்த 2004ல் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து வீரப்பனை என்கவுண்டர் செய்ய முக்கிய தகவல்கள் அளித்த சண்முகப்பிரியாவிற்கு மத்திய அரசின் சார்பில் 5 கோடி ரூபாயும், மாநில அரசின் சார்பில் தனியாக நிதி உதவியும், வீட்டுமனையும், பதக்கமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டிய நிலம், பரிசுத்தொகை போன்றவை எதுவும் வழங்கவில்லை என தற்போது சண்முகப்பிரியா குற்றம் சாட்டியுள்ளார்.



இதுகுறித்து சண்முகப்பிரியா வடவள்ளியில் தனது வீட்டிலிருந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

14 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய மாநில அரசுகள் அறிவித்த வெகுமதிக்காக போராடி வருகிறேன். ஆனால் இதுவரை நிதி ஏதும் கிடைக்கவில்லை. 

தற்போது எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குடும்ப பிரச்சினைகள் போன்ற பல சிக்கல்களில் நான் வாழ்ந்து வருகிறேன். 

இப்படி பல்வேறு சிரமங்களில் வாழ்ந்து வரும் எனக்கு மத்திய மாநில அரசுகள் அறிவித்த அறிவிப்பை நிறைவேற்றி எனக்கு உதவ வேண்டும்.

அதேபோல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா 'கில்லிங் வீரப்பன்' என்ற பெயரில் படம் எடுப்பது தொடர்பாக என்னுடன் ஒப்பந்தம் போட்டார்.

ஆறு லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்ட நிலையில் ஒரு லட்சம் ரூபாய் பணம் மட்டும் கொடுத்துவிட்டு மீதி தொகையை வழங்கவில்லை.

இது தொடர்பாக ராம்கோபால் வர்மாவிற்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன். தமிழக தயாரிப்பாளர் சங்கம் திரைப்பட நடிகர்கள் சங்கம் என திரையுலகில் இது தொடர்பாக முறையிட்டும் அவர்களிடமிருந்து இதுவரை எனக்கு நியாயம் கிடைக்கவில்லை.

இவ்வாறு சண்முகப்பிரியா தெரிவித்தார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...