காரமடை ரயில்வே மேம்பாலத்தில் வாகனங்களுக்கு அனுமதி

கோவை: மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் காரமடை ரயில்வே மேம்பால பணிகள் முடியாத நிலையிலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கபட்டன.

கோவை: மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் காரமடை ரயில்வே மேம்பால பணிகள் முடியாத நிலையிலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கபட்டன.

கோவைமாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஞாயிறு நீங்கலாக தினந்தோறும் கோவை மாநகருக்கு பாசஞ்சர் ரயில் இயக்கபட்டு வருகிறது.



இதில் ரயில் பாதை அமைந்துள்ள காரமடையில் கோவை-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையை கடக்கும் போது ரயில்வே கேட் ஒரு நாளைக்கு எட்டு முறைக்கு மேல் அடைக்கப்பட்டன.

இதனால் சாலை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன.

இதனை சரி செய்ய பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சார்பில் மேம்பாலம் கட்ட தீர்மானிக்கபட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் பணிகள் துவங்கின.



 ஒன்றரை ஆண்டில் பணிகள் முடிக்க வேண்டும் என்ற ஒப்பந்த அடிப்படையில் பணிகள் துவங்கப்பட்டன.

இருப்பினும் சர்வீஸ் ரோடுக்கு நிலம் எடுப்பில் மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்ததால் பணிகள் மிக மந்த கதியிலேயே நடைபெற்று வந்தன.

இதனால் மூன்று ஆண்டுகள் ஆகியும் பணிகள் முடிவடைய தாமதமானதால் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்பாட்டங்களும் நடத்தபட்டன.

இந்நிலையில், தற்போதும் 80 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. இருப்பினும் தற்போது பெய்த கன மழையால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே செய்வதறியாது திகைத்த அதிகாரிகள் வேறு வழி இன்றி இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனமான கார்களுக்கு மட்டும் பாலத்தின் வழியே அனுமதித்தனர்.



ஆனால், காரமடையில் நேற்று புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி ஏராளமான பொதுமக்கள் வந்ததால் எற்பட்ட கடும் நெரிசலால் லாரிகள் பேருந்துகள் என அனைத்து வாகணங்கள் பாலத்தில் செல்ல துவங்கின.

இதனால் விழிபிதுங்கிய அதிகாரிகள் பால பணிகளை விரைந்து முடித்து பாலத்தை முதலமைச்சரை வைத்து திறக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக தெரிவித்தனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...