விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் கன்னூர் சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் வசதிகூட கோவை விமான நிலையத்தில் இல்லையா...?

கோவை : இன்னும் சில மாதங்களில் கேரளாவில் தொடங்கவிருக்கும் கன்னூர் விமான நிலையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சேவைகள், வசதிகள் கூட, 50 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருக்கும் கோவை விமான நிலையத்திற்கு வழங்கப்படாதது உள்ளூர் மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : இன்னும் சில மாதங்களில் கேரளாவில் தொடங்கவிருக்கும் கன்னூர் விமான நிலையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சேவைகள், வசதிகள் கூட, 50 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருக்கும் கோவை விமான நிலையத்திற்கு வழங்கப்படாதது உள்ளூர் மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் உருவாகும் 2-வது பசுமை விமான நிலையமாக கன்னூர் விமான நிலையம் உருவாகி வருகிறது. வரும் டிச.,09-ம் தேதி இந்த விமான நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. இந்த விமான நிலையமானது, ஏர் இந்தியாவிற்கு ஸ்போக் ஏர்போர்ட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கேரளா ஏற்கனவே 3 சர்வதேச விமானநிலையங்கள் மற்றும் ஸ்போக் விமான நிலையங்களைக் கொண்டுள்ளது. 

அதேவேளையில், கேரளாவை விட வான் போக்குவரத்து அதிகளவு கொண்ட தமிழகத்தில் ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தை மட்டுமே கொண்டுள்ளது. 

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் ஏர் இந்தியா விமான நிறுவனம், வெளிநாடுகளுக்கு பயணிகள் நேரடியாக செல்லும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பயணிகள் அவர்களது லக்கேஜ்களை, சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனை உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகளுக்குப் பிறகு, சென்று சேர வேண்டிய நாடுகளில் நேரடியாக பெற்றுக் கொள்ளும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. உதாரணமாக, டெல்லி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள், லக்கேஜ்களைப் பற்றி கவலைப்படாமல், நேரடியாக அவர்கள் சென்று சேர வேண்டிய இணைப்பு விமானத்தில் பயணிக்கலாம்.

தமிழகத்தில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு செல்லும் பெரும்பாலானோர் கோவை சர்வதேச விமான நிலையத்தையே பயன்படுத்துகின்றனர். ஆனால், ஹப் மற்றும் ஸ்போக் விமானநிலைய தரம் இல்லாததால், பயணிகள் சென்னை அல்லது பெங்களூரூ விமான நிலையங்களுக்குச் சென்று, அங்கிருந்து பிற நாடுகளுக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. 

"அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள், தமிழகத்திற்கு ஏன் வழங்கப்படவில்லை," எனக் கேட்கிறார் கோவை கட்டமைப்புக் கமிட்டியைச் சேர்ந்த ஜே. சதீஷ். 

மேலும் அவர் கூறியதாவது, கோவையைச் சேர்ந்த மக்கள் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். எனவே, அவர்களைச் சந்திக்க இங்க இருக்கும் அவர்களது குடும்பத்தினர் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதேவேளையில், பல தொழிலதிபர்களும் தொடர்ந்து, பல்வேறு சர்வதேச தொழில் நகரங்களுக்கு சென்று வருகின்றனர். எனவே, பிற நகர்களைக் காட்டிலும், கோவை விமான நிலையத்திற்கு இந்த சேவை பொருத்தமானதாக இருக்கும், என்றார். 

கோவை விமான நிலையத்தில் இருந்து வெறும் 3 சர்வதேச விமானங்கள் மட்டுமே இருப்பதால், வெளிநாடுகளுக்கு தொடர்ந்து செல்பவர்களின் தேர்வு வேறு மாநில விமான நிலையங்களாகவே உள்ளது. அதவேளையில், உள்நாட்டு விமான சேவைகளும் மெச்சிக்கும்படி இல்லை. கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து, சில தனியார் விமான நிறுவனங்கள் டெல்லிக்கு நேரடி சேவையை வழங்கி வருகின்றனர். மேலும், பெங்களூரூ மற்றும் சென்னைக்கு அதிகளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கோவை விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கொங்கு குளோபல் ஃபார்ம் அமைப்பினர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை டெல்லிக்குச் சென்று தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

ஒரே சமயத்தில் 750 பயணிகளை மட்டுமே கோவை விமான நிலையத்தில் கையாள முடியும். போதுமான கட்டமைப்புகள் வசதிகள் இல்லாததால், விமான நிலையத்தில் விமானங்களை நிறுத்துவதில் நெரிசல் ஏற்படுகிறது. மேலும், இடவசதி பற்றாக்குறையால் பெரியரக விமானமான பி.787 விமானம் கோவை விமான நிலையத்தில் இன்னும் தரையிறக்க முடியாத நிலையே இருக்கிறது. 

ரூ.1,892 கோடி மதிப்பீட்டில் 2,000 ஏக்கர் பரப்பளவில் கேரளாவில் உருவாக்கப்பட்டுள்ள 4-வது சர்வதேச விமான நிலையமான கன்னூர் விமான நிலையம் டிச.,09-ம் தேதி திறக்கப்படுகிறது. இந்த விமான நிலையத்தின் வசதிகளை ஒப்பிட்டு பார்த்தாலே, கோவை விமான நிலையத்தின் நிலை அனைவருக்கும் தெரிய வரும்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...