கோவை எல்.ஜி., நிறுவனத்தின் சார்பில் நாளை 6-வது மாரத்தான் ஓட்டப்பந்தயம் : 1,500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் குடும்பத்துடன் பங்கேற்பு

கோவை : எல்.ஜி., நிறுவனத்தின் சார்பில் நாளை நடக்கவிருக்கும் 6-வது மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில், அந்நிறுவனத்தின் ஊழியர்கள் 1,500-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பங்கேற்க இருக்கின்றனர்.

கோவை : எல்.ஜி., நிறுவனத்தின் சார்பில் நாளை நடக்கவிருக்கும் 6-வது மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில், அந்நிறுவனத்தின் ஊழியர்கள் 1,500-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பங்கேற்க இருக்கின்றனர். 

நூறு நாடுகளுக்கு மேல் வெற்றித்தடம் பதித்துள்ள எல்ஜி நிறுவனம், தன் ஊழியர்கள் ஒற்றுமையைக் கொண்டாடவும், நலவாழ்விற்கான ஒன்றிணைந்த உறுதிப்பாட்டை வலியுறுத்தவும் #ELGi100KMCHALLENGE என்ற தலைப்பில் உலகெங்கும் பணிபுரியும் தங்கள் ஊழியர்களை ஒன்றிணைத்து பல்வேறு உடல் வலிமை சவால்களை மேற்கொள்ள உற்சாகப்படுத்தி வருகிறது. மாரத்தான் ஓட்டத்திற்கு தங்களைத் தயார் செய்துகொள்ளும் வகையில், குறுகிய நேரத்தில் 100 கி.மீ. தூரத்தை ஓட்டம், நடை, மிதிவண்டி ஓட்டம், நீச்சல் என பல்வேறு வழிகளில் கடந்த முதல் 25 ஊழியர்கள் இன்றைய நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டனர். 

இந்த நிலையில், புற்று நோய் விழிப்புணர்வை ஏற்படுத்தி, கோவை கேன்சர் ஃபவுண்டேஷன் அமைப்பிற்கு நன்கொடைகள் திரட்டும் நோக்கில் எல்.ஜி., நிறுவனத்தால் கோவை மாரத்தான் ஓட்டம் நாளை நடத்தப்படுகிறது. இதில், அந்நிறுவனத்தின் ஊழியர்கள் 1,500-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பங்கேற்க இருக்கின்றனர். 

எல்ஜி எக்விப்மென்ட்ஸ் & கோவை மாரத்தான் ரேஸ் இயக்குனர், ரமேஷ் பொன்னுசாமி கூறுகையில், “கோவை மாரத்தானுடன் இணைவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இதில் பங்குபெறவுள்ள ஊழியர்கள், இதுவரை மேற்கொண்டுள்ள கடும் பயிற்சியினால் அவர்கள் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். இந்த ஆண்டு 1,500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினரோடு வந்து பங்குபெறுவதில் பெருமிதம் கொள்கிறோம். ‘Inspire to get inspired’ (‘ஊக்கம் பெற ஊக்கம் கொடு!”) என்ற எங்கள் கொள்கை வெல்வதில் மகிழ்ச்சி,” என்று கூறினார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...