அனைத்து விதிமுறைகளுக்குட்பட்டே பணித்தேர்வு : உதவி பேராசிரியரின் குற்றச்சாட்டிற்கு பாரதியார் பல்கலை., விளக்கம்

கோவை : மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின்படி முறையான பணிச்சேர்க்கை நடைபெறவில்லை என பாரதியார் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அனைத்து விதிமுறைகளுக்குட்பட்டே பணித்தேர்வு நடைபெறுவதாக விளக்கம் பல்கலைக்கழக குழு விளக்கம் அளித்துள்ளது.

கோவை : மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின்படி முறையான பணிச்சேர்க்கை நடைபெறவில்லை என பாரதியார் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அனைத்து விதிமுறைகளுக்குட்பட்டே பணித்தேர்வு நடைபெறுவதாக விளக்கம் பல்கலைக்கழக குழு விளக்கம் அளித்துள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை சமூக பணி பயின்ற இவர், நெட் ஜே.ஆர்.எப். (NET JRF) தேர்வில் தேர்ச்சி பெற்று, அப்பல்கலைக்கழகத்திலேயே சமூக சேவை துறையில் உதவி பேராசிரியராக கடந்த 2016-ம் ஆண்டு பணித்தேர்வு செய்யப்பட்டார். 

இந்த நிலையில், தனது தேர்வு மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெறவில்லை என்பதை உணர்ந்த வெங்கடேசன், இந்த விவகாரம் தொடர்பாக உயர்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை சார்ந்த அலுவலக அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், எந்த அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டேன் என்றும், முறையாக பணிதேர்வு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2017-ம் ஆண்டு ஜுலை மாதம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார்

இதனிடையே, முன்னாள் துணை வேந்தர் கணபதி லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட நிலையில், அவருக்கு பதிலாக அமைக்கப்பட்ட துணைவேந்தர் குழுவும் வெங்கடேசனின் கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்காமல் கடந்த மார்ச் மாதம் அவருடைய ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் தனது அரசு வேலையை இழந்த வெங்கடேசன், தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்த உள்ளதாகவும், தனது கோரிக்கையை ஏற்று, முறையான விதிமுறைகளைப் பின்பற்றி பணித்தேர்வு செய்யப்பட்டேன் என நிரூபிக்கப்பட்டால் பணியில் மீண்டும் சேர தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். வழக்கமாகப் பணிக்காக லஞ்சம், முறைகேடு என பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வரும் நிலையில், முறையாக விதிமுறைகளைப் பின்பற்றி தேர்வு செய்யப்படவில்லை எனத் தெரிந்தவுடன், பணியை ராஜினிமா செய்துவிட்டு, சட்டப்போராட்டத்தில் ஈடுபடும் வெங்கடேசனின் முடிவு அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே, இது தொடர்பாக பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விளக்கம் கேட்ட போது, பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம் பொது என்ற பிரிவுக்குள் உள்ஒதுக்கீட்டின்படி வெங்கடேசனை தேர்வு செய்யப்பட்டதாகவும், அனைத்து விதிமுறைகளுக்குட்பட்டே பணித்தெர்வு நடைபெறுவதாக விளக்கம் அளித்துள்ளனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...