தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் கூட்டமைப்பின் 3-ம் ஆண்டு தேசிய கருத்தரங்கு

கோவை : தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் கூட்டமைப்பின் 3-ம் ஆண்டு கருத்தரங்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.

கோவை : தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் கூட்டமைப்பின் 3-ம் ஆண்டு கருத்தரங்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. 

இக்கருத்தரங்கில் வேளாண் அறிவியலாளர்கள், விவசாயிகள் மரம் சார்ந்த தொழிற்சாலைகள், மர அறுவடை மற்றும் விற்பனை குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் மர வளர்ப்பு சார்ந்த துறைகளைச் சார்ந்த உறுப்பினர்கள் என தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.



வேளாண் காடுகள், வேளாண் தோட்டங்கள், மற்றும் மரங்களின் வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள், குளோனல் முறையில் மரம் வளர்ப்பு, மர அறுவடை, மதிப்பு கூட்டல், விற்பனை செய்தல் குறித்து இக்கருத்தரங்கில் விளக்கிக் கூறப்பட்டது. வனத்திற்கு வெளியே மரங்கள் வளர்ப்பதன் அவசியத்தையும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய மரவகைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பின்னர், அரசு வனக்கல்லூரியின் ஆராய்ச்சி நிலையம் மூலம் வேளாண் காடுகள் வளர்ப்பிற்கு ஊக்குவிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மரம் சார்ந்த தொழிற்சாலைகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் விவசாயிகளுக்கு மர வளர்ப்பிற்கான தொழில்நுட்பங்களை வழங்கும், ஒப்பந்த முறை பண்ணையத்தில் சாகுபடி செய்யப்படும் மரங்களை தொழிற்சாலைகள் வாங்கிக்கொள்ளும். இதன்மூலம் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் மரத்திற்கும் எவ்வித தடையுமின்றி இடைத்தரகர் இல்லாமல் சரியான ஆதார விலை கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...