’டாடா க்ருசிபிள் கார்ப்பரேட் 2018’ விநாடி வினா போட்டியில் சென்னை சில்க்ஸ் அணி வெற்றி

கோவை : ’டாடா க்ருசிபிள் கார்ப்பரேட் 2018’ விநாடி வினா போட்டியின் கோவை பதிப்பில் சென்னை சில்க்ஸ் அணி வெற்றி பெற்றது.

கோவை : ’டாடா க்ருசிபிள் கார்ப்பரேட் 2018’ விநாடி வினா போட்டியின் கோவை பதிப்பில் சென்னை சில்க்ஸ் அணி வெற்றி பெற்றது.

கோவாவைச் சேர்ந்த ‘லோன்சிங்.காம்’ சித்தார்த் மிஸ்ரா மற்றும் பிரசாத் ஷெட்டி மற்றும் சென்னையின் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அனிருத்தா தத்தா மற்றும் ஜெயகாந்தன் ரங்கநாதன் ஆகியோர் அடங்கிய இரு அணிகளும் கோவையில் நடைபெற்ற தெற்கு பிராந்திய அளவிலான ‘டாடா க்ரூசிபிள் கார்ப்பரேட் வினாடி வினா- 2018’ போட்டியில் முதல் இடங்களைப் பிடித்தனர். இதையடுத்து, மும்பையில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான இறுதிப்போட்டியில், இந்த இரு அணிகளும் இதர 3 பிராந்தியங்களில் முதல் இடங்களைப் பெறும் இரு அணிகளுடன் மோதவிருக்கின்றன.

கோவை தாஜ் சூர்யாவின் விவாந்தா ஓட்டலில் நடைபெற்ற நகர அளவிலான இறுதிப்போட்டிக்கு தேர்ச்சிப் பெற 84 அணிகள் மோதின. இதில், ‘தி சென்னை சில்க்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த யோகேஷ் சி. பாய் மற்றும் அருள் சரவணன் வெற்றி பெற்று ரூ. 75,000 பரிசுத்தொகையை வென்றனர். மேலும், இவர்கள் தேசிய அளவிலான இறுதிப்போட்டிக்கு தேர்ச்சி பெற, பிராந்திய அளவில் நடைபெறவிருக்கும் தகுதிச்சுற்று போட்டியில் பங்கேற்பார்கள். 

சுகுணா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.விஷ்ணு சந்தோஷ் மற்றும் ஏ. கெவின் ரினால்ட் ஆகிய இருவரை கொண்ட அணி இரண்டாவது இடத்தைப் பிடித்து, ரூ. 35,000 பரிசுத்தொகையை வென்றது. இப்போட்டியின் இறுதிச்சுற்றில் கோவை தாஜ் சூர்யா – விவாந்தாவின் பொது மேலாளர் பி. குமார் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...