தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ராகிங் தடுப்பு பேரணியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ராகிங் தடுப்பு பேரணியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

பல்கலைக்கழகத்தின் ராகிங் தடுப்பு கமிட்டியின் சார்பில் அண்ணா அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தலைவர் எஸ். மகிமைராஜா வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராகக் கோவை மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து, வேளாண் பொறியியல் துறையின் தலைவர் என். வரதராஜு, தோட்டக்கலைத்துறை தலைவர் எம்.ஜவஹர்லால் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினர். ராகிங் என்பது கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்றும், சினிமா படங்களில் காட்டப்படும் ராகிங் போன்ற காட்சிகளை கடைபிடிக்கக் கூடாது என மாணவர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர். 



"இந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்ற கோவை மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா ஒரு தலைசிறந்த தலைவர். அவரிடம் தலைமைப் பண்புக்குரிய அனைத்துக் குணங்களும் உள்ளன. அவரைக் கடைபிடித்து வாழ்ந்தால், வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம்," என்றார் தோட்டக்கலைத்துறை தலைவர் எம்.ஜவஹர்லால்.



இதைத் தொடர்ந்து, நடைபெற்ற ராகிங் தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...