மேட்டுப்பாளையத்தில் ஊழல் குற்றச்சாட்டில் ஊராட்சி செயலர் பணி நீக்கம் : அலுவலர்கள் இன்றி கிராம நிர்வாக பணிகள் முடக்கம்

கோவை: மேட்டுப்பாளையத்தில் ஊராட்சி நிதியில் ரூபாய் இரண்டரை கோடி முறைகேடு செய்த ஊராட்சி செயலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அலுவலர்கள் இன்றி கிராம நிர்வாக பணிகள் முடங்குவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் ஊராட்சி நிதியில் ரூபாய் இரண்டரை கோடி முறைகேடு செய்த ஊராட்சி செயலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அலுவலர்கள் இன்றி கிராம நிர்வாக பணிகள் முடங்குவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்கதாசம்பாளையம் ஊராட்சி செயலராக பணியாற்றி வந்தவர் கனகராஜ். இவர் பணிபுரிந்த காலத்தில் ஊராட்சி நிதியை கோடிக்கணக்கில் பல்வேறு முறைகளில் கையாடல் செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் தலைமையிலான குழுவினர் இது குறித்து சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் உள்ள கணக்குகளை தணிக்கை செய்தனர்.

இதில் இவர் வீட்டு மனைப்பட்டா வரையறை மற்றும் அங்கீகாரம் வழங்குதல், குடிநீர் வைப்புத் தொகை, இதற்கான கட்டணம், வீட்டு வரி வசூல் போன்றவற்றில் போலி ரசீதுகள் தயாரித்து வழங்கி மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து கனகராஜ் உடனடியாக தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிதி முறைகேடு குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் கனகராஜ் மீண்டும் ஜடையம்பாளையம் ஊராட்சியின் செயலராக சமீபத்தில் மீண்டும் பணி அமர்த்தப்பட்டார். இந்நிலையில் இவர் ஏற்கனவே பணியாற்றி வந்த சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற ரூபாய் இரண்டரை கோடி முறைகேடு தொடர்பாக பணி நீக்கம் செய்யப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய நிதி முறைகேடு தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் இது தொடர்பான விசாரணையின் போதே மீண்டும் அருகில் உள்ள மற்றொரு ஊராட்சியின் செயலராக நியமிக்கப்பட்டதும், அவரே சில தினங்களில் மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான நோட்டீஸ் ஊராட்சி அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளதும் இப்பகுதி கிராம மக்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



ஊழல் புகாரில் சிக்கியுள்ளவரை ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு ஏன் நியமிக்க வேண்டும்? சில தினங்களில் அவர் மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்? என கேள்வி எழுப்பும் மக்கள், முறையாக ஊராட்சி செயலர் நியமிக்கப்படாமல் தங்களது கிராம வளர்ச்சிப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். மேலும், இதனால் காந்தி ஜெயந்தியன்று நடைபெற வேண்டிய கிராம சபா கூட்டமே நடைபெறாமல், ஊராட்சி மூலம் நடைபெற வேண்டிய கிராமங்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...