கோவையில் 'சுவர் சித்ரா கலா' ஓவியக் கண்காட்சி இன்று தொடக்கம்

கோவை : கிராப்ட்ஸ் கவுன்சில் ஆப் தமிழ்நாடு சார்பில் மகாபாரதம் குறித்த சுவர் சித்ரா கலா ஓவியக் கண்காட்சி கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையில் இன்று தொடங்கியது.

கோவை : கிராப்ட்ஸ் கவுன்சில் ஆப் தமிழ்நாடு சார்பில் மகாபாரதம் குறித்த சுவர் சித்ரா கலா ஓவியக் கண்காட்சி கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையில் இன்று தொடங்கியது. 

6 - ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சியில் மகாபாரதம் குறித்த சிறந்த ஓவியர் பிரின்ஸ் தொண்ணாக்களின் 35 மாணவியர் வரைந்த 112 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் கேரளத்தைச் சேர்ந்த 26 பேரும், சென்னையைச் சேர்ந்த 8 பேரும், டெல்லியைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர். 



ஓவியத் துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர் ஓவியர் பிரின்ஸ் தொண்ணக்கள். இவர் குருவாயூரில் உள்ள இன்டியூட்டிட் ஆப் மூரல் பெயின்ட்டிங் பட்டப்படிப்பைப் பயின்றவர். இவர் ஆண்டுதோறும் 100 மாணவ, மாணவியருக்கு சுவர் ஓவியம் குறித்து பயிற்சி அளித்து வருகிறார். அதைத் தவிர, இயற்கை வண்ணங்களை வைத்து எப்படி ஓவியம் தீட்டுவது குறித்து கற்றுக் கொடுக்கிறார். அவரின் ஓவியங்கள் பத்மாஸ்வாமி கோயில், ஹோட்டல்கள், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், திரைப்படங்களிலும் இடம்பெறவுள்ளன. 

ஏற்கெனவே, இத்தகைய ஓவியக் கண்காட்சி திருவனந்தபுரத்திலும், சென்னையிலும் நடைபெற்றது. இவற்றில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கோவையில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் பள்ளி மாணவ மாணவியரும், பொதுமக்களும் பங்கேற்கலாம். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...