தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ. 100 கோடி வழங்கிய அமிர்தானந்தமயியை கவுரவித்த பிரதமர் மோடி

டெல்லி : தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ. 100 கோடி நன்கொடையாக அளித்த மாதா அமிர்ந்தானந்தமயி தேவிக்கு விருது வழங்கி பிரதமர் மோடி கவுரவித்தார்.

டெல்லி : தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ. 100 கோடி நன்கொடையாக அளித்த மாதா அமிர்ந்தானந்தமயி தேவிக்கு விருது வழங்கி பிரதமர் மோடி கவுரவித்தார்.

ராஷ்ட்ரபதி பவன் கலாச்சார மையத்தில் மகாத்மா காந்தி சர்வதேச சுகாதார சம்மேளனத்தில் பிரதமர் மோடி மற்றும் ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் ஆன்டோனியோ கியுடெர்ஸ் ஆகியோர் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா செயல்திட்டமான தூய்மை இந்தியா திட்டத்திற்கு (ஸ்வச் பாரத் கோஷ்) மிகப்பெரிய பங்களிப்பான ரூ.100 கோடிகளை வழங்கிய ஸ்ரீ மாதா அமிர்ந்தானந்தமயி தேவிக்கு விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. இத்தொகை, கங்கை நதியோரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு கழிவறைகளை கட்டுவதற்காக செலவிடப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது :- மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சுத்தநிலை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பின் மீதான அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய சேவைக்கு அம்மாவிற்கு நன்றி. அவர் “எனது பிரத்தியேக நன்றிகளை நான் அம்மா அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். காரணம் இப்பணியை நாங்கள் துவங்கியவுடன், இதற்கான பொறுப்பினை அவர் மனமுவந்து தனது தோள்களில் ஏற்றிக்கொண்டார். பல்வேறு பெரும் தலைவர்கள் மற்றும் அம்மா போன்ற ஆன்மீகத் தலைவர்களை உத்வேகமாகக் கொண்டு, ஸ்வச் பாரத் செயல்திட்டம் பெரும் வலிமை பெற்றது மற்றும் வெறும் பிரச்சாரம் என்னும் நிலையிலிருந்து வளர்ந்து, தற்போது ஒரு தேசிய அளவிலான இயக்கமாக வலுவடைந்துள்ளது, என்று கூறினார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...