என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை எதிர் அமைப்புகள் முன் வைக்கின்றன- எஸ்.ஆர்.எம்.யூ பொதுச்செயலாளர் கண்ணையா

கோவை: ரயில்வே தொழிலாளர்கள் தேர்தல் சமயங்களில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை எதிர் அமைப்புகள் முன்வைத்து வருவதாக சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் கண்ணையா குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை: ரயில்வே தொழிலாளர்கள் தேர்தல் சமயங்களில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை எதிர் அமைப்புகள் முன்வைத்து வருவதாக சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் கண்ணையா குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி ரயில்வே மண்டல சொசைட்டி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை ஒட்டி அத்தேர்தலில் போட்டியிடும் சங்க உறுப்பினர்களுக்கு ஆதரவாக எஸ்.ஆர்.எம்.யூ சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணையா கோவையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். 



அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்க கூடிய துறையாக ரயில்வே துறை மட்டுமே விளங்கி வருகிறது. ஆனால், ஒரு கோடி வேலை வாய்ப்புகள் வழங்குவதாக உறுதியளித்த மத்திய அரசு விவேக் தேபராய் குழு பரிந்துரையின் அடிப்படையில் 4 லட்சத்து 75 ஆயிரம் இரயில்வே தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

தென்னிந்தியாவில் பறிபோகும் 18 ஆயிரம் பணிகளை பாதுகாக்க எஸ்.ஆர்.எம்.யூ நாடு தழுவிய போராட்டங்களை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது." என்றார்.



அவர் மீது உள்ள சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "நான் எந்த அரசுப் பணியிலும் இல்லாதவன். என் மீது, ரயில்வே ஊழியர்களால் புறக்கணிக்கப்பட்ட எதிர் அமைப்புகள் காழ்ப்புணர்ச்சியோடு இது போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வாக்குகளைப் பெற முயற்சிக்கிறது. 538 கோடி ரூபாய் மட்டுமே ஆண்டு வருமானம் கொண்ட அந்த அமைப்பில் 1500 கோடி ரூபாய் ஊழல் எவ்வாறு சாத்தியம்." என்றார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...