இந்துக் கடவுள்கள் குறித்து விமர்சனம்: கோவையில் கிருஸ்தவ மத போதகர் மீது வழக்குப்பதிவு

கோவை: இந்துக் கடவுள்கள் குறித்து விமர்சனம் செய்ததாக கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் மீது கோவையில் மூன்று காவல் நிலையங்களில் இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை: இந்துக் கடவுள்கள் குறித்து விமர்சனம் செய்ததாக கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் மீது கோவையில் மூன்று காவல் நிலையங்களில் இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட நாசரேத் அருகேயுள்ள நாலுமாவடியைச் சேர்ந்தவர் மத போதகர் மோகன் சி.லாசரஸ். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்து வருகிறார். கிறிஸ்தவ மத போதகரான இவர் இந்து கடவுள்கள் குறித்து விமர்சனம் செய்வது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

மேலும், ஜெபக்கூட்டங்களில் இந்து மதம் குறித்து விமர்சனம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பா.ஜ.க பிரமுகர் முருகேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி, சூலூர் ஆகிய காவல் நிலையங்களிலும், விஷ்வ ஹிந்த் பரிஷத் நிர்வாகி மனோ சங்கர் என்பவர் அளித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

153 ஏ-இரு மதங்கள் இடையே விரோத உணர்ச்சியைத் தூண்டுதல், 295-ஏ மதம் தொடர்பான குற்றங்களைப் புரிதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தனிப்படை போலீஸார் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸை கைது செய்ய அவரது சொந்த ஊருக்கு விரைந்துள்ளனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...