பவானி ஆற்றினால் எந்த பலனுமில்லை : கால்நடைகளுடன் கிராம சபா கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்

கோவை : பவானி ஆற்று கரையோர கிராமங்கள் பயன்பெறும் வகையில், கால்வாய்கள் மூலம் உபரி நீரை காய்ந்து கிடக்கும் குளம், குட்டைகளுக்கு திருப்பிவிட வலியுறுத்தி கிராமசபா கூட்டங்களில் கால்நடைகளுடன் பொதுமக்கள் பங்கேற்றனர்.

கோவை : பவானி ஆற்று கரையோர கிராமங்கள் பயன்பெறும் வகையில், கால்வாய்கள் மூலம் உபரி நீரை காய்ந்து கிடக்கும் குளம், குட்டைகளுக்கு திருப்பிவிட வலியுறுத்தி கிராமசபா கூட்டங்களில் கால்நடைகளுடன் பொதுமக்கள் பங்கேற்றனர். 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்தில் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 17 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பதினோரு ஊராட்சிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள் பவானியாற்றின் கரையோரத்தில் அமைந்திருந்தாலும், இப்பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நீடிக்கின்றது. போதிய மழையின்றி இங்குள்ள குளம், குட்டைகள் காய்ந்து நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, விவசாயமும் பாதிப்புள்ளாகி வருகிறது.

மழைக்காலங்களில் பில்லூர் அணையில் இருந்து பவானியாற்றில் திறந்து விடப்படும் உபரி நீர், வெகுவேகமாக கடந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையை சென்றடைகிறது. இதனால், கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடினாலும், விவசாயத்திற்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை. மேலும், தங்களுக்கான குடிநீர் தேவையும் சரிவர பூர்த்தி செய்யப்படுவதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் இப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள்.

இதனையடுத்து, இந்த ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற கிராமசபா கூட்டங்களில், நீரின்றி வறட்சி பாதித்துள்ள நிலையினை வெளிப்படுத்தும் விதமாக தங்களது கால்நடைகளுடன் ஊர்வலமாக வந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.



இரும்பறை, மூடுதுறை, வெள்ளியங்காடு, மருதூர், காளம்பாளையம் உள்ளிட்ட ஆற்றின் அருகில் உள்ள ஊராட்சிகளில், பவானியாற்று உபரி நீரை குழாய்கள் மூலமாகவோ, கால்வாய்கள் வெட்டியோ கொண்டு வந்து தங்களது ஊர்களில் வறண்டு கிடக்கும் குளம் குட்டைகளை நிரப்பவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். 

இந்த நடவடிக்கையின் மூலம் வறட்சி நீங்கி “கிராமங்கள் எப்போது சுய பூர்த்தியடைகிறதோ அப்போதுதான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தமைக்கு ஒப்பாகும்” என்ற மகாத்மா காந்தியின் குறிக்கோள் நிறைவேறும் என தெரிவிக்கும் கிராம மக்கள், வீணாகும் உபரி நீரை முறையாக பயன்படுத்துவதன் மூலம் விவசாயம் செழிக்கும், வருவாயின்றி கிராம மக்கள் பிழைப்பு தேடி நகரங்களுக்கு இடம்பெயரும் சூழல் மாறும், விவசாய நிலங்கள் மனையிடங்களாக மாற்றப்படுவது தடுக்கப்படும் என்கின்றனர்.

கிராம மக்களின் ஒட்டுமொத்த வலியுறுத்தலையடுத்து இங்கு நடைபெற்ற கிராமசபா கூட்டங்களில் இது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...