மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வரும் 23-ம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம்

கோவை : பாரபட்சத்துடன் செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வரும் 23-ம் தேதி மாநில அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என கோவையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா அறிவித்துள்ளார்.

கோவை : பாரபட்சத்துடன் செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வரும் 23-ம் தேதி மாநில அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என கோவையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா அறிவித்துள்ளார். 

காந்திபுரம், இரத்தினபுரி பகுதி வணிகர் சங்க இணைப்பு விழாவில் பங்கேற்க கோவை வந்த வணிகர்கள் சங்க தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது :- வணிகர்கள் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளிடம் வழங்கியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் தொடர்ந்து வணிகர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வணிகர்கள் பேரமைப்பு தொடர் போராட்டத்தை அறிவித்து இருக்கிறது. 

வால் மார்ட் நிறுவனம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவில் கால் பதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், டீசல், பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் கொடுக்கப்பட்ட பின்னரும், அரசு அதனை ஏற்றுக் கொள்ளாமல் தொடர் விலையேற்றம் செய்து வருகிறது. 

இதனைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பிளாஸ்டிக் பை தடை சட்டம் என்பது அந்நிய நாட்டுக்கு சாதகமான சட்டமாக அமைந்திருக்கிறது. இதனை முறைப்படுத்த வேண்டும். ஒருமுறை கூட ரீசைக்கிள் செய்ய முடியாத பிளாஸ்டிக்கை தடை என்பதை முழுமையாக ஏற்று கொள்கிறோம். மறு சுழற்சி செய்ய கூடியதை கட்டாயமாக அனுமதிக்க வேண்டும். 

வணிகவரி துறை மூலமாக பல்வேறு இடர்பாடுகளை வணிகர்கள் சந்தித்து வருகின்றனர். உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்வதன் காரணமாக வணிகத்தை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டு உள்ளது. 

அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வணிகர்கள் மேல் சுமத்தி, தங்களை அகற்றி விட்டு அந்நிய நாட்டிற்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. அரசின் இந்த செயல்பாட்டை கண்டித்து வரும் 23-ம் தேதி தமிழகம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். கோவையில் மண்டல தலைவர் சந்திரசேகர் தலைமையில் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான வணிகர்கள் கலந்து கொள்வார்கள். 

வணிகர்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் புறம் தள்ளும்பட்சம் டிசம்பர் மாதம் காலவரையற்ற கடை அடைப்பு செய்ய இருக்கிறோம். அனைத்து மாநிலத்தின் வணிகர்கள் இணைந்து டெல்லியில் மாபெரும் பேரணி தர்ணா போராட்டம் நடத்தப்படும்.

மேலும், நச்சுத்தன்மை கொண்ட வெளிநாட்டு பானங்களான கோக், பெப்சி தடை செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் இதனை புறம் தள்ள வேண்டும். .உள்நாட்டு குளிர் பானங்களுக்கு அரசு ஊக்கம் தர வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளுக்கு வணிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். விரைவில் மாற்றம் காணப்படும், என்றார். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...