விநாயகர் சதுர்த்தி வசூல் குறித்து கணக்கு கேட்டதில் ஆத்திரம் : நண்பரை கொலை செய்த கோவை பா.ஜ.க., நிர்வாகிக்கு வலைவீச்சு

கோவை : விநாயகர் சதுர்த்தி வசூல் குறித்த வரவு - செலவு கணக்கு சரிபார்ப்பின் போது ஏற்பட்ட தகராற்றில் நண்பரையே பாட்டிலால் குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் பா.ஜ.க. நிர்வாகியை ஆலந்துறை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை : விநாயகர் சதுர்த்தி வசூல் குறித்த வரவு - செலவு கணக்கு சரிபார்ப்பின் போது ஏற்பட்ட தகராற்றில் நண்பரையே பாட்டிலால் குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் பா.ஜ.க. நிர்வாகியை ஆலந்துறை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி என்ற குட்டி. இவர் பா.ஜ.க.,வின் இளைஞர் அணியின் மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். அண்மையில் நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து கந்தசாமி மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் இணைந்து விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து விசர்ஜனம் செய்தனர். இதில், மீதமிருந்த தொகையில், இவர்கள் கிடா வெட்டி, மது விருந்து வைத்துள்ளனர்.

போளுவாம்பட்டி கணபதி தோட்டத்தில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தின் போது, பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் கந்தசாமியிடம் அவரது நண்பர் விஜயகுமாரின் மகன் நாகராஜ் (21) வரவு - செலவு கணக்கு குறித்து விளக்கம் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கந்தசாமி, அருகிலிருந்த மது பாட்டிலை உடைத்து, நாகராஜின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த நாகராஜ், சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். 



பின்னர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருக்கும் பா.ஜ.க., பொறுப்பாளர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(b), 307, 302 ஆகிய பிரிவுகளின் கீழ் ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...