பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உதகை வட்டாச்சியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீலகிரி : உதகையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட துணை வட்டாட்சியர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயரிழிந்தார்.

நீலகிரி : உதகையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட துணை வட்டாட்சியர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயரிழிந்தார்.



கூடலூரில் வட்டாட்சியராகப் பணியாற்றி வந்தவர் அப்துல் ரகுமான் (43). ஆதிதிராவிடர் நலத்துறையின் துணை தாசில்தாராகப் பொறுப்பு வகித்து வந்த இவர், உதகையில் உள்ள பழைய அறவங்காடு பகுதியில் வசித்து வந்தார். இவரின் சகோதரர் கார்கில் போரில் வீரமரணம் அடைந்துள்ளார். இதனால், இவருக்கு அரசு பணியில் வேலை வாய்ப்பு கிடைத்தது. இவர் கடந்த சில நாட்களாகவே கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, நீலகிரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இவர் கடந்த 29-ம் தேதி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், இவரது உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து, கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு அழைத்து வரப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அரசு தரப்பில் முறையான பதில் இன்னும் வரவில்லை. ஆகவே இவர் பன்றி காய்ச்சல் தொற்றி பலியானாரா..? அல்லது வேறு ஏதேனும் மர்ம காய்ச்சலுக்கு பலியானாரா என்ற சந்தேகம் நிலவி வருகிறது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...