முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனைப் பெற்று வரும் 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனைப் பெற்று வரும் 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யலாம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பியது. இதனைக் கருத்தில் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அறிவுரைப்படி, தமிழக அரசு உடனடியாக அமைச்சரவை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி அடுத்தநாளே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



விடுதலை தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு மாதங்கள் ஆன நிலையில், தீர்மானத்தை ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டதாகவும், அப்பாவி ஏழு தமிழர்களின் விடுதலையை தமிழக ஆளுநர் வேண்டும் என்றே காலந்தாழ்த்துவதாகக் கூறி ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தின் போது அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் உடனடியாக ஏற்றுக் கொண்டு ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை என சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோர் கூறி உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், 8 கோடி தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து விடுதலைக்கான உத்தரவை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...