கோவைக்கு விரைவில் வருகிறது 'குடிநீர் ஏ.டி.எம்' : 20 லிட்டர் குடிநீர் வெறும் ரூ.7 தானா...?

கோவை : பணத்தை எடுக்கும் ஏ.டி.எம். இயந்திரங்களைப் போலவே கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 'குடிநீர் ஏ.டி.எம்' விரைவில் அமல்படுத்தப்பட இருக்கிறது.

கோவை : பணத்தை எடுக்கும் ஏ.டி.எம். இயந்திரங்களைப் போலவே கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 'குடிநீர் ஏ.டி.எம்' விரைவில் அமல்படுத்தப்பட இருக்கிறது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 இடங்களில், 'குடிநீர் ஏ.டி.எம்' சேவையை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கவுள்ளது. இத்திட்டத்தில், 20 லிட்டர் குடிநீரை 7 ரூபாய்க்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு குடிநீரை வழங்கிடும் 'குடிநீர் ஏ.டி.எம்' சேவை கொச்சி, ஹைதராபாத், மும்பை போன்ற நகரங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இதேபோல, கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் 'குடிநீர் ஏ.டி.எம்' சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டு, கேரளாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நகரில் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் 'குடிநீர் ஏ.டி.எம்' இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. 



முதற்கட்டமாக, காந்திபுரம் பேருந்துநிலையம், சுங்கம் சந்திப்பு, உக்கடம் பேருந்துநிலையம் உள்ளிட்ட 30 இடங்களில் 'குடிநீர் ஏ.டி.எம்' சேவை தொடங்கவுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "குடிநீர் ஏ.டி.எம். சேவையின் மூலம் குறைந்த கட்டணத்தில் சுத்தமான குடிநீர் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 300 சதுர அடி இடம் மற்றும் நிலத்தடி நீர் இணைப்பு ஆகியவை மாநகராட்சி சார்பில் வழங்கப்படுகிறது. நிதி, மின் இணைப்பு, இயந்திரங்களைப் பொருத்துதல், பராமரிப்பு மற்றும் பணியாளர்களின் ஊதியம் ஆகியவற்றை ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். 

20 லிட்டர் குடிநீருக்கு ரூ. 7 கட்டணமாக வசூலிக்கப்படும். இதில், ஒரு ரூபாய் மாநகராட்சிக்கு செலுத்தப்படும். உயர்தர தொழில்நுட்பங்களான ஆர்.ஒ மற்றும் ஓசோன் சுத்திகரிப்பு முறைகளில் தண்ணீர் சுத்திகரிக்கப்பட உள்ளது. மக்களின் குடிநீர் தேவையை பொறுத்து ஒரே வார்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட 'குடிநீர் ஏ.டி.எம்.' இயந்திரங்கள் பொருத்தப்பட வாய்ப்புள்ளன," என்றனர். 

மேலும், இம்மாத இறுதிக்குள் நகரில் 'குடிநீர் ஏ.டி.எம்' சேவை தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...