திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம் : மக்கள் அளித்த மனுக்கள்

திருப்பூர்: வாராந்திர குறைதீர் கூட்டம் இன்று காலை திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அளித்த மனுக்களின் விவரங்கள் பின்வருமாறு:-

திருப்பூர்: வாராந்திர குறைதீர் கூட்டம் இன்று காலை திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அளித்த மனுக்களின் விவரங்கள் பின்வருமாறு:-

 

அவிநாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சி சாமந்தகோட்டை கிராம மக்கள் அளித்த மனு:-

எங்கள் ஊராட்சியில் 10000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட வஞ்சிபாளையம், பொன்ராமபுரம், சவுடாம்பிகைநகர், சாமந்தங்கோட்டை, கோதபாளையம், வெங்கமேடு ஆகிய 6 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஏற்கனவே குடிப்பழக்கத்துக்கு ஆளான நபர்களால் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.

ஏற்கனவே வஞ்சிபாளையம் 2 டாஸ்மாக் கடைகளிலும், கணியாம்பூண்டி பிரிவு அருகே ஒரு டாஸ்மாக் கடையும் உள்ள நிலையில், தற்போது புதிதாக சாமந்தங்கோட்டையில் டாஸ்மாக் கடை அமைந்தால் எங்கள் பகுதியின் நிம்மதி குலையும். புதிதாக டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தில் கோயிலும் உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களும் அனைத்து தரப்பினரும் இந்த சாலை போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவதால் குடிப்பழக்கம் அதிகமாவதற்கும், அதிகமான விபத்துகள் ஏற்படவும் வழிவகுக்கும். ஆகவே டாஸ்மாக் கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது.

என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதே போல், அவிநாசி அருகே வள்ளிபுரம் கிராம மக்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி நடப்பதாகவும், அதனை உடனடியாக கைவிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி 50-வது வார்டு பொதுமக்கள் அளித்த மனு:-

எங்கள் பகுதி முத்தையன் லே-அவுட் மற்றும் கே.எம்.நகரில் உள்ள பாறைக்குழியில் மாநகராட்சி குப்பை கொட்டி மூடி வருகிறது. ஆரம்பத்தில் மண் மற்றும் குப்பையை போட்டு சமன் செய்வதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். ஆனால், இறைச்சி மற்றும் மருத்துவக்கழிவுகளை கொட்டுவதால் தொற்றுநோய் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அதேபோல் சுவாசப்பிரச்சினையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே பாறைக்குழியை மூடுவதுடன், உடனடியாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.

அவிநாசி அருகே அசநல்லிபாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு:-

எங்கள் ஊரில் 100 குடும்பங்கள் உள்ளன. கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக எங்கள் பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்தது. வெள்ளநீர் செல்வதற்கு வடிகால் வசதி இல்லாததால், எங்கள் பகுதியில் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. ஆகவே மழைக்காலங்களில் வெள்ள நீர் உள்ளே புகாதபடி தக்க ஏற்பாடுகள் செய்துதர வேண்டும்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...