கோவையில் பெண்ணின் இறப்புக்கு காரணமான காதலன் மற்றும் தோழி நடவடிக்கை கோரி மனு

கோவை: தாழ்த்தப்பட்ட பெண்ணின் இறப்புக்கு காரணமான காதலன் மற்றும் தோழி மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் விடுதலை முன்னணியினர் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் மனு அளித்தனர்.

கோவை: தாழ்த்தப்பட்ட பெண்ணின் இறப்புக்கு காரணமான காதலன் மற்றும் தோழி மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் விடுதலை முன்னணியினர் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் மனு அளித்தனர்.

வீரபாண்டி அறிவொளி நகரைச்சேர்ந்த சிவக்குமாரின் மகள் சந்தியா. இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது கோத்தகிரியைச் சேர்ந்த ஆசிப் என்பவரை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இரு வீட்டாரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனையடுத்து சந்தியாவின் தோழி கல்பனாவின் வீட்டில் வைத்து ஆசிப்பை சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாததால், சந்தியாவின் பெற்றோர் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் கடந்த ஜீன் 16-ம் தேதி புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காரமடை காவல் துறையினர் மேட்டுப்பாளையம் நெல்லித்துரை அருகே சந்தியாவின் பிரேதத்தை கண்டுபிடித்துள்ளனர். 

சந்தியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், அவரது காதலன் ஆசிப் மற்றும் கல்பனாவிடம் உரிய விசாரணை நடத்தி கொலையாளிகளை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மக்கள் விடுதலை முன்னணியின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...