சான்றிதழ்கள் வழங்காத கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து செவிலியர் பயிற்சி மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை : சான்றிதழ்கள் கல்லூரி நிர்வாகம் வழங்காததால் மேற்படிப்பு படிக்க முடியாத நிலை உள்ளதாக செவிலியர் பயிற்சி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வேதனையுடன் மனு அளித்தனர்.

கோவை : சான்றிதழ்கள் கல்லூரி நிர்வாகம் வழங்காததால் மேற்படிப்பு படிக்க முடியாத நிலை உள்ளதாக செவிலியர் பயிற்சி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வேதனையுடன் மனு அளித்தனர். 

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று பொள்ளாச்சி வட்டம் ஜமீன் கோட்டாம்பட்டியில் உள்ள 'சிவா பாரா மெடிக்கல்' கல்லூரியில் 2013-16 வரை மூன்றரை ஆண்டு செவிலியர் பட்டயப்படிப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். 

அதில் கூறியிருப்பதாவது :- கடந்த 2016-ம் ஜூலை மாதம் இறுதி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு செவிலியர் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ்கள் மட்டும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் செய்முறை பயிற்சி பெற்றோம். தங்களது 10 மற்றும் 12-வது மதிப்பெண் சான்றிதழ்களை நிர்வாகம் தராமல் இழுத்தடிக்கின்றனர். இது குறித்து கேட்டால் முறையான தகவல்களை தர மறுப்பதால், தங்களது மேற்படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்தக் கல்லூரியின் நிர்வாக இயக்குனராக இருந்த சிவா கல்லூரியைச் சுரபி ஜோதிமுருகன் என்பவர் வசம் ஒப்படைத்து விட்டனர். தற்போதைய நிர்வாகம் முறையாகப் பதில் அளிக்காமல் உள்ளதால் தங்கள் மேற்படிப்பு என்பது கேள்வி குறியாக உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கல்வி சான்றிதழ்களைப் பெற்று தர வேண்டும், இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினர். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...