ஜனாதிபதி பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

டெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

 

பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "ஜனாதிபதியின் ஞானம் மற்றும் பல்வேறு விஷயங்களில் அவரது செயல்பாடுகளால் இந்தியா பெரிதும் பயனடைந்திருக்கிறது. நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவிலும் அவர் இணைந்திருக்கிறார். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார். 



மதிப்பிற்குரிய ஜனாதிபதிக்கு கடவுள் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்க பிரார்த்தனை செய்வதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேபோல், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்துடன் தனது வாழ்த்து கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...