பரியேறும் பெருமாள் திரைப்படத்தை மூன்று முறையாவது பாருங்கள் - இயக்குனர் லெனின் பாரதி புகழாரம்

கோவை: மேற்குத்தொடர்ச்சி மலை திரைப்படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வரும் சூழலில், பரியேறும் பெருமாள் திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று மேற்குத்தொடர்ச்சி மலை திரைப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி தெரிவித்துள்ளார்.

கோவை: மேற்குத்தொடர்ச்சி மலை திரைப்படத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வரும் சூழலில், பரியேறும் பெருமாள் திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று மேற்குத்தொடர்ச்சி மலை திரைப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி தெரிவித்துள்ளார்.

ஓசை தன்னார்வ அமைப்பு சித்தாப்புதூர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடத்திய மாதாந்திர சூழல் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் லெனின் பாரதி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இன்றைய கால கட்டத்தில் தமிழகத்தில் நிலவி வரும் சாதிய கட்டமைப்புகளை கட்டியுள்ளார்.



வரவிற்கும் வாரத்தில் மூன்று முறையாவது அந்த படத்தை பாருங்கள். ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்திப் பேசும் மற்றும் பெண்களை தவறான முறையில் சித்தரிக்கும் திரைப்படங்களை மக்கள் தவிர்க்க வேண்டும். 



இயக்குனர்களுக்கு சமூகத்தின் மீது அக்கறை இருக்க வேண்டும். பொழுதுபோக்கு என்கிற பெயரில் இயக்குனர்கள் மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் படங்களை தயாரிக்க வேண்டாம். எனது திரைப்படத்திற்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழும் மக்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது." என்றார்.



இந்த சந்திப்பில் எழுத்தாளர் புவியரசு, பாமரன், ஓவியர் ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாடினர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...