குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரம் விழுந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை முதல் பரவலாக பெய்த மழையின் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் லால்ஸ் பால்ஸ் பகுதியில் மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை முதல் பரவலாக பெய்த மழையின் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் லால்ஸ் பால்ஸ் பகுதியில் மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் மற்றும் மேக மூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.



இதன் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் லால்ஸ் பால்ஸ் பகுதியில் ராட்சத மரம் விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் தீயணைப்பு நிலைய பொறுப்பு அதிகாரி குமார் தலைமையிலான தீயணைப்புப்படை வீரர்கள் முரளி, சுப்ரமணி, கண்ணன், கதிரவன், ரஞ்சித் கொண்ட ஆகியோர் ஒரு மணி நேரம் போராடி ராட்சத மரத்தினை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, போக்குவரத்து சீரானது. இன்று விடுமுறை நாள் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று உதகைக்கு சுற்றுலா வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...