திருப்பூரில் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 30 1/2 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 30 1/2 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் பெருமாள் கோவிலுக்கு காரில் வந்த தம்பதியினரின் கவனத்தை திசை திருப்பி அவர்கள் காரில் வைத்திருந்த 15 சவரன் நகை கொள்ளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அதே போல் ஈஸ்வரன் கோவில் பகுதியில் செந்தில் என்பவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் பணமும், தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகாத்தால் என்ற மூதாட்டி மீது அரிப்பு பொடி தூவி 7 சவரன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டது.



இப்படியாக தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட நகை பறிப்பு கொள்ளையர்களைப் பிடிக்க திருப்பூர் காவல்துறையினர் தனிப்படை அமைத்தனர். இந்த நிலையில், திருப்பூர் சிடிசி சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் மூன்று பேரும் தெற்கு காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததோடு, சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களில் உள்ளிருக்கும் மடிக்கணினி, பணம் என கடந்த 8 மாதங்களாக கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருச்சி ராம்ஜீ நகரைச் சேர்ந்த கிரிநாதன், பிரசாத், அஷார் அலி ஆகிய மூன்று பேரை தெற்கு போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 30 1/2 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் பணத்தை பரிமுதல் செய்து, மூவரையும் சிறையில் அடைத்தனர்

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...