அமராவதி ஆற்றின் கரையோரங்களில் பனை விதைகளை நடவு செய்யும் இளைஞர்கள்

திருப்பூர்: உடுமலை அருகே கணியூரில் மழை தன்னார்வ அமைப்பு மற்றும் இளைஞர்கள் சார்பில் பனை மரம் நடும் விழாவை சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: உடுமலை அருகே கணியூரில் மழை தன்னார்வ அமைப்பு மற்றும் இளைஞர்கள் சார்பில் பனை மரம் நடும் விழாவை சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணியூரில் மழை அமைப்பு மற்றும் இளைஞர்கள் சார்பில் 60 லட்சம் பனை மரங்களை வளர்க்கும் முயற்சியாக, அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகள் மற்றும் வாய்க்கால் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளில் பனைமர கன்றுகள் நடவு செய்ய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் இளைஞர்கள் முயற்சி மேற்கொண்டனர்.



நிலத்தடி நீரை புத்துயிர் பெற வைக்கும் நோக்கில் செயல்பட்ட தன்னார்வலர்கள், ஒவ்வொரு கிராமங்களிலும் இளைஞர்கள் உதவியுடன் பனைமரம் நடும் விழாவை இன்று நடத்தினர். இந்த நிகழ்ச்சியை மடத்துக்குளம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். உடன் ஏராளமான இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு பனைமர கன்று நடும் விழா தொடர்ந்து நடைபெறவுள்ளதாகத் தன்னார்வலர்கள் தெரிவித்தனர். நவீன விவசாயம் என்ற பெயரில் இயற்கையை அழித்து செயற்கையை உருவாக்கியதன் விளைவு மரங்கள் வெட்டப்பட்டு மழை இல்லாமல் வறட்சியை நோக்கி மக்களை கொண்டு சென்றுள்ளது எனவே நவீன விவசாயத்தை ஒழித்து இயற்கை முறையிலான விவசாயத்தை முன்னெடுக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் உறுதி ஏற்றுக் கொண்டனர்.



Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...