அ.தி.மு.க ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காது: கோவையில் சவால் விட்ட டி.டி.வி தினகரன்

கோவை: நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காது என்பதை சாவலாக கூறுவதாக அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

கோவை: நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காது என்பதை சாவலாக கூறுவதாக அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "அ.தி.மு.க தொண்டர்கள் இல்லாத இயக்கம். அ.தி.மு.க.,வில் இருந்த உயிரோட்டமான தொண்டர்கள் அ.ம.மு.க.,விற்கு இடம் பெயர்ந்துவிட்டனர்.

ஆட்சி, அதிகாரம் வைத்து கொண்டும், இரண்டு நாளைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து, சுற்றுலா செல்லலாம் என வாகனத்தில் மக்களை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு அழைத்துச் சென்று தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக காட்ட முயற்சிக்கிறார்கள்.

அரசு நிகழ்ச்சி வழக்கப்படி அழைப்பிதழில் சட்டமன்ற உறுப்பினரான என் பெயரை சேர்த்துள்ளனர். ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கவில்லை. அ.ம.மு.க.,வின் பிளேக்ஸ், பேனர்களை காவல் துறை அகற்றுவது கேவலமாக உள்ளது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பிளேக்ஸ், பேனர்களை அகற்ற வேண்டுமென்ற உயர் நீதிமன்றம் உத்தரவை கேட்பார்களா? நீதிமன்றம் சொல்லியும் ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகரை தமிழக அரசு கைது செய்யவில்லை. அமைச்சர் பதவி இருப்பதால் ஆர்.வி.உதயகுமார் மேதாவி போல பேசுகிறார். அமைச்சர் பொறுப்பில்லை எனில், யாரும் அவரை சீண்டமாட்டார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காது என்பதை சாவலாக கூறுகிறேன்." என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...