ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் : கோவையில் துணை சபாநாயகர் தம்பிதுரை பேச்சு

கோவை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கோவை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தமிழர்களின் மனதில் எம்.ஜி.ஆர் நிலைத்திருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சியாக நூற்றாண்டு நிறைவு விழா அமையும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக அமைக்கப்படும். நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் ஏக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கப்படாது.

விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டங்களையும் ஏற்கமாட்டோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். தமிழக நலனையும், தமிழக விவசாயிகள் நலனையும் பாதுகாக்கும் இயக்கமாக அ.தி.மு.க இருக்கும். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலை போல, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க தனித்துப் போட்டியிடும்.

கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் பேசுவது என்ற முதலமைச்சர், துணை முதலமைச்சர் கருத்தில் தனக்கு கருத்து வேறுபாடு கிடையாது. அதே சமயம் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வலிமை அ.தி.மு.க.,விற்கு உள்ளது. பா.ஜ.க., அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்கிறதா என எனக்குத் தெரியாது.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் தான் கேட்க வேண்டும். மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். தமிழகத்தில் திராவிட கட்சிகளை தவிர்த்து, தேசிய கட்சிகளுக்கு இடமில்லை." என்றார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...