கொள்ளையில் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் நண்பர் கொலை : 3 பேர் கைது

திருப்பூர் : இளநீர் திருடி விற்பனை செய்ததில் கிடைத்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் நண்பர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் : இளநீர் திருடி விற்பனை செய்ததில் கிடைத்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் நண்பர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 



கடந்த 26-ம் தேதி பல்லடத்தை அடுத்த சாமளாபுரம் கள்ளப்பாளையம் நொய்யல் ஆற்றங்கரை ஓரம் அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரது சடலம் வெட்டுக்காயங்களுடன் கிடந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் மங்கலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும், சடலத்தின் அருகே இருந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். 

அதில், சூலூர் எல்லக்காடு பகுதியைச் சேர்ந்த வெல்டிங்க் பட்டறை தொழிலாளி மகேந்திரன் என்பதும், இவருக்கு அஞ்சலி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், கொலை நடப்பதற்கு முந்தைய தினம் மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற மகேந்திரன் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து, மகேந்திரனின் நண்பர்களான பாண்டியன், செந்தில்குமார், குமார் ஆகிய மூவரையும் பிடித்த மங்கலம் போலீசார், அவர்களிடம் விசாரித்ததில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. 

இவர்கள் நால்வரும் மது அருந்த போதிய பணம் இல்லாததால் அப்பகுதிகளில் உள்ள பல்வேறு தோட்டங்களில் இளநீர் திருடி விற்று வந்துள்ளனர். இதில், இளநீர் விற்பனை செய்த பணத்தை முறையாகப் பங்கிடவில்லை என மகேந்திரன் மீது மற்ற மூவருக்கும் ஆத்திரம் இருந்து வந்துள்ளது. 

இது குறித்து கேட்ட போதும் மகேந்திரன் முறையான பதில் அளிக்காததால், அவரை தீர்த்துக் கட்ட மூவரும் திட்டமிட்டு கள்ளப்பாளையம நொய்யல் ஆற்றங்கரையோரம் மது அருந்த அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் மகேந்திரனை மூவரும் சரமாரியாக வெட்டி சாய்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மூவரையும் கைது செய்த மங்கலம் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...