கோவையில் ஒரே நாளில் அதிகளவு பனை விதைகளை நடவு செய்யும் தொண்டு நிறுவனங்கள்

கோவை: பனை விதை திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் அதிகளவிலான பனை விதைகளை நடவு செய்ய பல்வேறு அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.


கோவை: பனை விதை திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் அதிகளவிலான பனை விதைகளை நடவு செய்ய பல்வேறு அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் வரும் அக்., 7-ம் தேதி பனை விதை திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக மாவட்டத்தில் அன்றைய தினம் ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்ய பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கைகோர்த்துள்ளனர். ஆனால், தற்போது கோவையில் பெய்யத் தொடங்கியிருப்பதால், அதனைப் பயன்படுத்தி பல இடங்களில் பனை விதைகளை நடவு செய்யும் பணிகள் தொடங்கி விட்டன. 



மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் அழிந்துவிட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மூலம், தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமையைக் கொண்ட பனை மரம் நடவு செய்யப்படுகிறது. ஈரமான நிலங்கள், நொய்யல் ஆறு, விவசாய நிலங்கள், வனப்பகுதியின் எல்லைப்புறங்கள் ஆகிய இடங்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் உதவியுடன் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 



பேரூர் தமிழ் கல்லூரியின் பேராசிரியர் திருநாவுக்கரசர் கூறுகையில், "பனை மரத்தின் மகத்துவத்தை அறிந்திருந்த சேர அரசர்கள், அதனைப் பாதுகாப்பதில் முக்கியத்துவம் கொடுத்தனர். அவர்களது மலர் கூட பனையாகவே இருந்தது. பனை மரங்கள் மண்களை வளப்படுத்த உதவுகின்றன. பழங்கால தமிழ் இலக்கியத்தை (ஓலைச்சுவடிகள்) பாதுகாப்பதில் பனை இலைகளே இன்றியமையாததாக இருந்தன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சில பனை இலைகள் எழுதுவதற்கும் பயன்படுத்தப்பட்டன," என்றார்.

இதேபோல, குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் கூறியதாவது :- குளக்கரைகளில் நடவு செய்யப்படும் பனைமரங்கள், கரைகளை வலுப்படுத்த உதவுகின்றன. மேலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பயன்படுகிறது. 

அதேபோல, சில காரணங்களுக்காக பனை மரங்கள் கீழே விழுந்தாலும், அங்கிருந்து மீண்டும் முளைக்கும் திறன் கொண்டது. எனவே, பனை மரங்களை நடவு செய்ய திட்டமிட்டு, எங்கள் குழுவினர் அதன் விதைகளை சேகரித்து வருகிறோம்," என்றார்.

உடுமலைப் பேட்டை, தாராபுரம், நாகப்பட்டினம், திருப்பூர், கருமத்தம்பட்டி, கோபி, அன்னூர், தொண்டாமுத்தூர் மற்றும் கோவை மாவட்டத்தின் பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாய நிலங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து சுமார் 1 லட்சம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

மேலும், 7 தனியார் அமைப்புகளும், பல்வேறு தனியார் நிறுவனங்களும் பனை விதைகளை வழங்கி தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாராண்யத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அவரது கிராமத்தில் இருந்து மட்டும் சுமார் 36,000 பனை விதைகளை சேகரித்து வழங்கினார்.

இது குறித்து 45 வயதுடைய சே.கு.கோ., ரவி சிம்ப்ளிசிட்டிக்கு பிரத்யேகமாக கூறுகையில், "வறண்டப் பகுதிகளில் நடவு செய்யப்படும் பனை மரங்கள் நிலத்தடி நீரை அதிகரிக்கச் செய்கின்றன," என்றார்.

அருளகத்தைச் சேர்ந்த பாரதிதாசன் பேசியதாவது:- பனை மரங்கள் குளக்கரைகளை வலிமையடையச் செய்கின்றன. அதோபடு, பனை மரத்தை சார்ந்து, பச்சைக் கிளி, மர நாய், பனை உழவாரன் என்ற பறவை இனம், பனை அணில் மற்றும் பனங்காடை போன்ற பல்வேறு உயிரிகள் உள்ளன. அதோடு, பனை மரத்தின் பாகங்களை வைத்து பல்வேறு தயாரிப்புகள் உருவாக்கப்படுகின்றன," எனக் கூறினார். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...