கோவில் கட்டண பார்க்கிங்கில் தனிநபரின் அடாவடி வசூலுக்கு துணைபோகும் காவல்துறை : பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு

திருப்பூர் : உடுமலை அருகே உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் தனிநபருக்கு உடந்தையாக காவல்துறையினர் செயல்படுவதாகக் கூறி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் : உடுமலை அருகே உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் தனிநபருக்கு உடந்தையாக காவல்துறையினர் செயல்படுவதாகக் கூறி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் போராட்டம் நடத்தினர். 



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி வனப்பகுதியில் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் ஏராளமான பொதுமக்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவற்காக வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆண்டுதோறும் வாகன நிறுத்துமிடத்தை உருவாக்கி வருகின்றனர்.

ஆனால், தற்போது, தனியார் இடத்தில் வாகனங்கள் நிறுத்தி கட்டணம் செலுத்த காவல்துறையினர் வற்புறுத்துவதாகவும், அரசுக்கு சொந்தமாக பல இலட்சம் ஏக்கர் நிலங்கள் அப்பகுதியில் உள்ளபோது, தனியார் நிலத்தில் கட்டணம் செலுத்த காவல்துறையினர் ஏன் மக்களை மிரட்ட வேண்டும் என்று கூறி உடுமலையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சத்தியவாணி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். 

பொதுமக்களும் அவருடன் சேர்ந்து கேள்வி எழுப்பியதால், காவல்துறை அனுமதியுடன் தான் தனிநபர் கட்டணம் வசூலிப்பதாக ஆய்வாளர் சிவக்குமார் கூறினார். இதைத் தொடர்ந்து, போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. பின்னர், உடுமலை வட்டாச்சியா் தங்கவேலுவைத் தொடர்புகொண்டு கேட்ட போது, காவல்துறையினர் தன்னிச்சையாக முடிவு செய்து கட்டணம் வசூலிப்பதாகவும், இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாகவும் கூறினார். 



இன்று காலை 12 மணியளவில் மட்டும் 1,500 வாகனங்களுக்குக் கட்டணமாக ரூ. 45,000-த்தை வாகன நிறுத்துவதற்கான கட்டணமாக அந்த தனிநபர் வருமானம் ஈட்டியுள்ளார். ஒரு தினம் கூட முடிவடையாத நிலையில், இவ்வளவு வருமானம் ஈட்டும் இந்தக் கட்டண பார்க்கிங்கை அரசிடமே வைத்திருந்தால், பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு பார்க்கிங் மூலம் கிடைக்கும் தொகையைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அரசுக்கு வரும் வருமானத்தை போலீசார் தனிநபருக்கு தாரை வார்க்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...