எஸ்.ஐ., உள்பட 3 பெண் போலீஸாரை தாக்கிய சம்பவம் : திருப்பூரைச் சேர்ந்த இரு இளைஞர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை

திருப்பூர் : பெண் எஸ்.ஐ., உள்பட 3 பெண் போலீஸாரை தாக்கிய இரு இளைஞர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

திருப்பூர் : பெண் எஸ்.ஐ., உள்பட 3 பெண் போலீஸாரை தாக்கிய இரு இளைஞர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.  

மதுரை மாவட்டம் பெரியபட்டியைச் சேர்ந்தவர்கள் ராம்குமார் (26). குமார் (28). உறவினர்களான இருவரும், கடந்த 2015-ம் ஆண்டு செப்.28-ம் தேதி நள்ளிரவு 12.15 மணிக்கு பெருமாநல்லூர் சாலை கணக்கம்பாளையம் பிரிவில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது, அங்குள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த பெருமாநல்லூர் போலீஸார், இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது, இருவரும் குடிபோதையில் இருப்பதை கண்டறிந்தனர். 



இதையடுத்து, அவர்கள் மீது போலீஸார் அபராதம் விதிக்க முற்பட்டபோது, இருவரும் பெண் எஸ்.ஐ., கோமதி, பெண் காவலர் தீபா, முதல்நிலை பெண் காவலர் சுதா மற்றும் காவல் நண்பர்கள் குழுவின் தினேஷ் கிருஷ்ணன் ஆகியோரை தாக்கியுள்ளனர். மேலும், அங்கிருந்த சேர், டேபிள், பல்பு ஆகியவற்றை உடைத்து தகாத வார்த்தையில் பேசியதுடன், மரக்கட்டையால் தாக்கினர். இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். 

இது தொடர்பாக பெருமாநல்லூர் போலீஸார், இந்திய தண்டனை சட்டம் 294(பி) பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், (332) அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்குதல் நடத்தியது, (324), (506) தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரிக்கப்பட்டது. 

அப்போது, நீதிபதி முகமது ஜியாவுதின் தீர்ப்பில் கூறியதாவது:- பெண் போலீஸாரை தகாத வார்த்தைகளை சொல்லி அடித்து இருக்கிறார்கள் என்பது, மூளையில் ஊறிப்போன பாலின வேறுபாடு என்ற அழுகிப் படர்ந்த சிந்தனை தான். பெண்கள், ஆண்களுக்கு கீழ்படிந்தவர்கள் என்ற உணர்வுகள் மாற்றப்பட்டாக வேண்டும். பெண்களின் மீதான குற்றங்களுக்கு பெண்களையே பொறுப்பாக்குற மனநிலையில் தான் இன்னும் சமூகம் இருக்கிறது. ஒரு ஆணைப்போல் பெண்ணும் சமமான மனிதப்பிறவி என்று சொல்வதற்குரிய உரிமை கூட பெண்களுக்கு மறுக்கப்படுகிறது.

ஆண்மை என்பதை தவறாக வரையறை செய்ததன் விளைவுதான் இத்தகைய இந்த இளைஞர்களின் வரைமுறையற்ற செயல்பாட்டுக்கு காரணம் என இந்நீதிமன்றம் கருதுகிறது. இந்த வழக்குக்கு தொடர்பு இல்லை என்றாலும், ‘நிர்பயா’ வழக்கின் சூழலை இங்கு பரிசீலிக்கப்பட்டது பொருத்தமானதாக இருக்கும். பெண்கள் பொறுப்பு வகிப்பதும், பேசுவதும், அதிகாரத்துக்கு வருவதும் இப்போதும் சில ஆண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு முழுமையான மனித மதிப்பு இல்லை என்று நம்முடைய மரபு சொல்லவில்லை. ஆகவே, ராம்குமார் மற்றும் குமார் ஆகியோரின் குற்றம் நிருபிக்கப்பட்டு, தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது, என்றார். 

இதில், ராம்குமாருக்கு ரூ. 2,500-ம், குமாருக்கு ரூ. 1,500-ம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் பி.முருகேசன் வழக்கில் ஆஜரானார். இதையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...