கோவையில் மின்சாரம் தாக்கி துப்புரவு பணியாளர் உயிரிழப்பு : உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கோவை : தனியார் மருத்துவமனையின் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த துப்புரவு பணியாளரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவை : தனியார் மருத்துவமனையின் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த துப்புரவு பணியாளரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உக்கடம் சி.எம்.சி., காலனி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவர் முஸ்பூர் ரகுமான் என்பவர் நடத்தி வரும் மாஸ் ஹவுஸ் கீப்பிங் என்ற நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். 

இந்த நிலையில், நேற்று கோவில்பாளையம் பகுதியில் உள்ள ராஜா மருத்துவமனையின் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்காக மணிகண்டன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தண்ணீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது, மின்சாரம் தாக்கி மணிகண்டன் உயிரிழந்தார். இதையடுத்து, மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது. 

இந்த நிலையில், மருத்துவமனையின் அஜாக்கிரதையும், உரிய பாதுகாப்பு உபகரணங்களை அவர் பணியாற்றி வந்த நிறுவனத்தின் உரிமையாளர் முஸ்பூர் ரகுமான் வழங்காததுமே மணிகண்டனின் உயிரிழப்பிற்கு காரணமென அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

மேலும், மருத்துவமனை மீதும், முஸ்பூர் ரகுமான் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மணிகண்டனின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...