கோவை வனப்பகுதிகளில் பனை விதைகளை நடவு செய்யும் வனத்துறை

கோவை: வனப்பகுதிகளில் பனை மரங்களை வளர்க்கும் வகையில் கோவையில் உள்ள பல்வேறு வனப்பகுதிகளில் பனை விதைகளை நடவு செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: வனப்பகுதிகளில் பனை மரங்களை வளர்க்கும் வகையில் கோவையில் உள்ள பல்வேறு வனப்பகுதிகளில் பனை விதைகளை நடவு செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் வரும் 7ம் தேதி பனை விதை திருவிழா நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக அந்த அமைப்பினரிடம் இருந்து பனை விதைகளை வனத்துறையினர் வாங்கியுள்ளனர்.



நேற்று மட்டும் மதுக்கரை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகங்களில் பனை விதைகளை நடவு செய்யும் பணி தொடங்கியது. மதுக்கரையில் மட்டும் நேற்று 1,400 விதைகள் நடவு செய்யப்பட்டன. கோவை வனக்கோட்டத்தில் உள்ள பல்வேறு வனப்பகுதியில் 30,000 விதைகள் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அருளகம் அறக்கட்டளையைச் சேர்ந்த பாரதிதாசன் கூறுகையில், "யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வன எல்லைப்பகுதிகளில் உள்ள அகழி கரையில் பனை விதைகள் நடவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் அகழியின் கரை பலமாகும். அதோடு, பனை மரம் பல்வேறு விதங்களில் வன உயரிகளுக்கு உதவுகிறது.



பனை பழங்களை யானைகள் விரும்பி உண்ணும், பனை மரத்தை சார்ந்து, பச்சைக் கிளி, மர நாய், பனை உழவாரன் என்ற பறவை இனம், பனை அணில் மற்றும் பனங்காடை போன்ற பல்வேறு உயிரிகள் உள்ளன." என்றார். 

இது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் கூறுகையில், "யானை அகழிகளை வெட்டவும், அதனை பராமரிக்கவும் ஆண்டுதோறும் பல கோடி செலவிடப்படுகிறது. பனை மரங்களை அங்கு வளர்ப்பதன் மூலம் அகழி பராமரிப்பு செலவு நிச்சயம் குறையும். வன விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்கும் இயற்கை அரணாக பனை மரங்கள் இருக்கும்." என்றார். 



Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...