நவம்பர் முதல் தமிழகத்தில் உள்ள கருவூலகங்களை கணினி மூலம் ஒருங்கிணைத்து செயல்படும் திட்டம் அமல்

நீலகிரி : இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் உள்ள கருவூலகங்களை கணினி மூலம் ஒருங்கிணைத்து செயல்படும் திட்டம் நவம்பர் முதல் தொடங்குவதாக தமிழக கருவூலம் மற்றும் கணக்குத் துறை முதன்மை செயலர் தென்காசி ஜவஹர் அறிவித்துள்ளார்.

நீலகிரி : இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் உள்ள கருவூலகங்களை கணினி மூலம் ஒருங்கிணைத்து செயல்படும் திட்டம் நவம்பர் முதல் தொடங்குவதாக தமிழக கருவூலம் மற்றும் கணக்குத் துறை முதன்மை செயலர் தென்காசி ஜவஹர் அறிவித்துள்ளார்.

உதகையில் கருவூல பணிகளை மேம்படுத்தும் பொருட்டு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டக் கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழக கருவூல மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலர் ஜவஹர் கலந்து கொண்டார்.



கூட்டத்தில் அவர் கூறியதாவது :- தமிழகத்தில் 293 கருவூலங்கள் உள்ளன. இதில், 29,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தமிழகத்தில் உள்ள 9 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதும், 7 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகை வழங்குவதும் இவர்களது பணியாகும். கடந்த 2017-18 ஆண்டில் ரூ. 1,76,000 கோடியை கருவூலம் கையாண்டுள்ளது. கருவூலங்கள் கணினி மயமாக்கி ஒருங்கிணைக்காததால் பணிகள் மெதுவாக நடைபெறுகிறது. இதற்காகத்தான் மாநிலம் முழுவதும் ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.



இதன்மூலம், ஒரு வாரம் நடைபெறும் பணி அரைமணி நேரத்தில் முடிந்துவிடும். ஊழியர்கள் கேட்கும் பிஎஃப், டி.ஏ., போன்ற பணப்பலன்கள் காலையில் இரசிது கொடுத்தால், மாலையில் பணம் கிடைக்கும் வகையில் பணி வேகமாக இருக்கும். உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பது குறித்து உடனடியாக எஸ்.எம்.எஸ்., வரும். இப்போது, கருவூல ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதம் இப்பணி முடிவடைந்துவிடும். நவம்பர் மாதம் முதல் இந்தியாவில் முதன்முறையாக தமிழக கருவூலம் கணினி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு விடும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...