நீலகிரி : உதகை அருகே இடி தாக்கியதில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி : உதகை அருகே இடி தாக்கியதில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உதகையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள கப்பத்தொரை பகுதியில் தோட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த 5 பேர் மீது இடி தாக்கி உள்ளது. இதில், சின்னப்பொண்ணு பலத்த காயங்களுடன் உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடன் பணியாற்றிய வளர்மதி (40), லேசான காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எஞ்சிய 3 பேர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.