கோவையில் மாற்றுத்திறனாளி பள்ளி குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் விநியோகம்

கோவை : கோவையில் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில் 150-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

கோவை : கோவையில் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில் 150-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. 



மாநகராட்சி காதுகேளாதோர் பள்ளியில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. 

இதில், மாநகராட்சி எல்லைக்குட்பட்டு வசிக்கும் வாய் பேச முடியாத, காதுகேளாத, கண்பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்கள் 210 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதுடன், அரசு சலுகைகளைப் பெற உதவும் தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டது.



இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையைச் சேர்ந்த தங்கமணி கூறுகையில், "இந்த முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு, அவர்களது புகைப்படம் மற்றும் இருப்பிட முகவரியுடன் விண்ணப்பிக்கப்பட்டது. இதில், சிகிச்சை பெற வேண்டிய மாணவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டது. அதோடு, உதடுபிளவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் முதலமைச்சர் நலத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன," என்றார். 



ஏற்கனவே, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் வால்பாறை, பேரூர் ஆகிய இரு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், கிணத்துக்கடவு, காரமடை, ஆனைமலை மற்றும் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம்கள் நடத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...