பொய் வழக்குப்பதிவு : செட்டிப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் மீது தங்கப்பட்டறை உரிமையாளர் சங்கத்தினர் புகார்

கோவை : சேதாரத் தங்கம் வாங்கும் பட்டறையாளர்கள் மீது திருட்டு தங்கம் வாங்கியதாக செட்டிபாளையம் காவல் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு பதிவு செய்வதாகக் கூறி பட்டறை உரிமையாளர் சங்கத்தினர் காவல் கண்காணிப்பாளிரிடம் புகார் மனு அளித்தனர்.


கோவை : சேதாரத் தங்கம் வாங்கும் பட்டறையாளர்கள் மீது திருட்டு தங்கம் வாங்கியதாக செட்டிபாளையம் காவல் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு பதிவு செய்வதாகக் கூறி பட்டறை உரிமையாளர் சங்கத்தினர் காவல் கண்காணிப்பாளிரிடம் புகார் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட பட்டறை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அதில், பட்டறைகளில் பணியாற்றுவர்களிடமிருந்து சேதார தங்கம் வாங்கும் தங்கள் சங்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவரை திருட்டு தங்கம் வாங்கியதாகப் பொய் வழக்கில் செட்டிபாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பிராங்க்ளின் கடந்த 23-ம் தேதி உரிய தகவல் அளிக்காமல் கைது செய்துள்ளனர். எந்த தவறும் செய்யாத தினேஷ் மீது பொய் சாட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

அதேபோல, குடும்பத்தினரிடமிருந்து பிராங்க்ளின் 25 சவரன் தங்கத்தை பெற்றுக்கொண்ட பின்னரும், பொய் வழக்கு போட்டு அலைக்கழிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் பிராங்க்ளின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும். திருட்டு தங்கம் வாங்கி விற்பனை செய்யும் வெங்கடேஷ் என்பவரை பொய்யாக சாட்சி சொல்லுமாறு உதவி ஆய்வாளர் மிரட்டியுள்ளார். மேலும், தினேஷை மிரட்டி தங்கத்தையும் பறித்துள்ளனர், இவ்வாறு அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...