காரமடை அருகே பட்ட பகலில் வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை: போலீசார் விசாரணை

கோவை: காரமடை அருகே பட்ட பகலில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் 19 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் ஒரு லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

கோவை: காரமடை அருகே பட்ட பகலில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் 19 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் ஒரு லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.



காரமடையில் உள்ள மூனுகட்டியூர் பகுதியில் வசித்து வருபவர் கோபால்சாமி. அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை தனது வீட்டைப் பூட்டி விட்டு, தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.

பின்னர், மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருநதத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 19 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.



மேலும், கோபால்சாமியின் வீட்டின் அருகே உள்ள அவரது சகோதரர் வீட்டின் கதவு இதே போல் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வீட்டில் எந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்படவில்லை. இதனை அடுத்து கோபால்சாமி காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...