வடகிழக்கு பருவமழை: கோவை மாவட்டத்தில் சராசரி மழையளவைவிட கூடுதல் மழை பதிவாகும்

கோவை : கோவை மாவட்டத்தில் சராசரி மழையளவை விட கூடுதல் மழை பதிவாகும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


கோவை : கோவை மாவட்டத்தில் சராசரி மழையளவை விட கூடுதல் மழை பதிவாகும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

2018-ம் ஆண்டின் வடகிழக்கு பருவமழைக் காலத்திற்கான (அக்., முதல் டிச., வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, ஜுன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பசுபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து தகவல்கள் பெறப்பட்டன. இதில், வடகிழக்கு பருவமழையானது மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழையளவு கிடைக்கும் வகையில் பெய்யும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 328 மி.மீ., சராசரி மழையளவாகும். ஆனால், நடப்பாண்டில் 363 மி.மீ., மழைப் பொழிவினைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் 281 மி.மீ., மழையும், மலை மாவட்டமான நீலகிரியில் அதிகபட்சமாக 462 மி.மீ., மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வடகிழக்கு பருவமழையின் போது, மேற்கு மண்டல மாவட்டங்களான கோவை, ஈரோடு திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நிலக்கடலை, ஆமணக்கு, துவரை, சோளம், மக்காச்சோளம் போன்ற பயிரிடலாம் என விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...