மழை பாதிப்பு புகார்களை வாட்ஸ்-அப் மூலம் கோவை மாநகராட்சியிடம் தெரிவிக்கலாம்

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தெரிவிக்க 81900-00200 என்ற வாட்ஸ்-அப் எண்ணை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தெரிவிக்க 81900-00200 என்ற வாட்ஸ்-அப் எண்ணை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நகரின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

மதிய வேலை வரை வெயில் அதிகமாக இருந்தாலும், மாலை நேரத்தில் பலத்த காற்றோடு மழை பெய்து வருகிறது. இதனால், பிரதான சாலைகள், குறுக்கு சந்துகள், தரைப்பாலங்கள் போன்ற தாழ்வான பகுதிகளில் மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்கி, வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடும் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றது.



குறிப்பாக, சங்கனூர் சாலையில் அமைந்துள்ள காமராஜர் புரம், செல்வபுரம், கள்ளிமடை மற்றும் புளியகுளம் ஆகிய பகுதிகளில் வடிகாலை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்து குடியிருப்புவாசிகளின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது. 

மேலும், தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதோடு, இரவு நேரம் மின் வெட்டும் ஏற்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் கொசுத்தொல்லை, துர்நாற்றம், ஈ தொல்லை என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த சூழலில், மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவிக்க மாநகராட்சி சார்பில் வாட்ஸ் ஆப் தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தெரிவிக்கவும், சீரமைப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் மாநகராட்சியின் ஐந்து மண்டல அலுவலகங்களிலும் உதவி ஆணையாளர்கள் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிட்டாலும், சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டாலும் பொதுமக்கள் 81900-00200 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகைப்படத்தோடு புகார்களை தெரிவிக்கலாம். தகவல் கிடைத்ததும் மாநகராட்சி மண்டல அதிகாரிகள் உடனடியாக சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது." என்றனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...