திருப்பூரில் எம்.எல்.ஏ.,க்கள் வழங்கிய 126 உறுதிமொழிகளுக்கு தீர்வு - உறுதிமொழி ஆய்வுக்குழு தலைவர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட 195 உறுதிமொழிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்ததாகவும், அவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 126 உறுதிமொழிகளுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் உறுதிமொழி ஆய்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட 195 உறுதிமொழிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்ததாகவும், அவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 126 உறுதிமொழிகளுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் உறுதிமொழி ஆய்வுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் உறுதிமொழி ஆய்வுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் உறுதிமொழி ஆய்வுக்குழுவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், திருப்பூர் மாவட்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின் ஆய்வுக்குழு தலைவர் இன்பத்துரை செய்தியாளர்களிடம் பேசுகையில், "சட்டமன்ற உறுதிமொழி ஆய்வுக்குழு சட்டப்பேரவையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொடுத்த உறுதிமொழிகள் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து மாவட்டம் தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதனடிப்படையில், திருப்பூரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 195 உறுதிமொழிகள் நிலுவையில் இருந்தன.

அவை 7.15 மணி நேரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 126 உறுதிமொழிகளுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ளவற்றுக்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவிநாசி-அவிநாசிபாளையம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும் போது கழிவு நீர் செல்ல வழி இல்லை என திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கூறியதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஒரு வாரத்திற்குள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்." என்று அவர் பேசினார். 



Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...